கரூரில் பாஜக கட்சி துவங்கிய நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்திய அரசியலில் இன்று தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் பாஜகவும் ஒன்று. ஏப்ரல் 6, 1980 அன்று தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தினம், ஆண்டுதோறும் பாஜக தொண்டர்களால் அதே நாளில் கொண்டாடப்படுகிறது, அதைத் தொடர்ந்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. கரூரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார், அதைத் தொடர்ந்து கட்சி நிறுவனர்கள் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஜி மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஜி ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.