பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மோடி அரசின் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததை கண்டித்து. பீஹாரில் முதல்வருக்கு எதிராக கண்டன ஊர்வலம். ஊர்வலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் படத்தை செருப்பால் அடித்த வண்ணம் நடந்த ஊர்வலம். மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்.

நிதீஷ் குமார் கட்சியில் இருந்து 5_முஸ்லீம் தலைவர்கள் விலகிய நிலையில்.இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் நிலையில்,
மோடி, அமித்ஷா திட்டமிட்டு,இஸ்லாமிய மக்களின் வக்ப் வாரியத்தின் மீது சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்திற்கு ஆதரவாக பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்ததை கண்டித்து,
முகம்மது அஸ்ரப் அன்சாரி எம்.பி., சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷா நவாஸ் மாலிக், அவரவர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்த நிலையில். முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் கடிசியினரே களத்தில் இறங்கிய நிலையில். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இளைஞர் பிரிவு மாநில செயலாளர் தப்ரோஸ்ஹாசன், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பில் இருப்பவர்களின் ராஜுனாமா தினம் தொடரும் நிலையில்.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி இப்போதே ஒரு பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். வக்ப் திருத்த சட்டத்தை அடுத்து,இந்தியா முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்களின் சொத்து பற்றிய பிரச்சினை எழுப்ப பாஜக,ஆர்.எஸ்.எஸ்., இருப்பதை. ராகுல் காந்தி இன்று (ஏப்ரல்_5)ம் தேதி ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பீஹாரில் எழுந்து வரும் எதிரலயை உன்னிப்பாக கவனித்தாலும். ஒட்டுமொத்த பாஜகவினர் மத்தியில் மைனாரிட்டி பாஜக அரசின் நாட்கள் எண்ணப்படும் அரசியல் சூழலை உருவாக்கிவிடுமோ.? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது கருத்து பீஹாரில் உலா வருகிறது என்பது, பீஹாரில் உள்ள அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளதாம்.








