• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ByPrabhu Sekar

Apr 5, 2025

சாய்ராம் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 31 மாணவர்களுக்கு 35 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா இன்று சாய் கல்வி குழுமத்தில் தலைவர் சாய் பிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை மற்றும் டி.சி.எஸ். நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைவர் கே.எம்.சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 31 மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 964 இளங்கலை மாணவர்களுக்கும், 143 முதுகலை மாணவர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 107 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட சிவாதாணு பிள்ளை செய்தியாளர்களிடம் பேசும்போது, உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக உள்ளன. அந்த வகையில் இந்தியா தற்போது வளர்ச்சியடைந்த நாடாக மாறி உள்ளது. டெக்னாலஜி, புதிய தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றிலும் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்தார். இந்தநிகழ்ச்சியில் கலைச்செல்வி லியோ முத்து, ஷர்மிளா ராஜா, ரேவதி சாய் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.