• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நான் தொண்டனாக மட்டும் தொடர்வேன்…

BySeenu

Apr 4, 2025

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது ,

பாராளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படைக்கப்பட்டு உள்ளது. Amendment 2025 வெற்றிகரமாக, நிறைய கட்சிகளின் ஆதரவோடு ஜனநாயக முறையில், அனைவரின் கருத்துக்களையும் கேட்டு, waqf சட்டத்திற்கு ஒரு கோடி பேர், கருத்து கொடுத்து இருக்கிறார்கள். அதையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு, அதில் 13 மாற்றங்களை கொண்டு வந்து ராஜ்யசபா லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சியில் தமிழ்நாட்டில் வரவேற்கிறோம்.

குறிப்பாக ஏழை இஸ்லாமிய சொந்தங்களுக்கு, வரப்பிரசாதமாக அமையும். தமிழகத்தில் நிறைய அரசியல் கட்சிகள் இதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவை எதிர்த்து போராட்டங்கள் கூட செய்து கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டியதை எங்கள் கடமையாக பார்க்கிறோம். 1947 சுதந்திரத்திற்கு முன்பு, வாஃப்க் என்பது, ஒரு இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர், சேரிட்டிக்காக நல்ல காரியத்திற்காக பயன்படுத்த வேண்டும் என அவருடைய சொத்தை எழுதி வைப்பார், அந்த சொத்தின் பெயர்தான் வாஃப்க என்று சொல்லப்படுகிறது.

இதை பராமரிக்கக் கூடிய, செயலில் தான் மத்திய அரசும் மாநில அரசும் ஈடுபடுகிறது. 1913இல் பிரிட்டிஷ் அரசு முதன் முதலாக, இந்த சொத்தை பராமரிப்பதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள். Mussalmans wafq validating act என்பதை கொண்டு வருகிறார்கள். 1923, 1930 களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு தான், 1954 ல் wafq க்கு சரியான சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மாநிலத்தில் wafq சொத்தை பராமரிப்பதற்கான போர்டு வேண்டும் என திட்டமிடப்பட்டது. மத்திய அரசு Central wafq council , என மாநிலத்தில் இருக்கும் சொத்துக்களை பராமரிக்க 1954 ல் உருவாக்கப்பட்டது. Wafq act 1995 ல் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஒரு சொத்து wafq சொத்து தானா என்பதையெல்லாம் முடிவு செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில், 2013 ல் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறார்கள், இன்று 12 ஆண்டுகள் கழித்து மறுபடியும், 1995, 2013 ல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில், 2025 ல் மாற்றங்களோடு wafq act நிறைவேறி இருக்கிறது. இதில் என்ன புதுசாக இருக்கிறது, எதற்காக எதிர்க்கட்சியின் சில ஆட்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்று பார்த்தால், 1913 -2013 இதுவரை, wafq போட்டிருக்கு கீழ இருந்தா சொத்துக்கள், 18 லட்சம் ஏக்கர். 2013-2025 வரை புதிதாக 21 லட்சம் ஏக்கர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அப்படி பார்த்தால் மொத்தமாக இந்தியாவில், 39 லட்சம் ஏக்கர் நிலங்கள் அவர்களின் கையில் இருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே, மற்றும் wafq போது மட்டும் தான் ஒரு தனிநபர் அமைப்பாக செயல்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டுமே 21 லட்சம் ஏக்கர் சேர்க்கப்பட்டு இருக்கிறது, இதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது. உதாரணமாக தமிழகத்தின் திருச்செந்துறை, என்ற ஊரே wafq சொத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. நிறைய கோவில் நிலங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது அதனால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். தனிப்பட்ட சொத்தைக்கூட எடுத்துக் கொள்வதாக பொதுமக்களும் குற்றம் சுமத்தினர்.

அதனால் இந்த சட்டத்தின் மூலம் தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது. யார் ஒருவரின் சொத்தை wafq போர்டின் சொத்து என சொல்ல முடியும்?. இவ்வளவு நாளாக ஒரு அரசாங்கத்தின் சொத்தை wafq board எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்று கொண்ட வரப்பட்டு இருக்கும் ஆக்டில் அது மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் அரசாங்கத்தின் சொத்து நேர்மையாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது. Wafq பொறுத்தவரை ஒரு சொத்தை கொடுக்கிறார்கள் என்றால், யார் கொடுக்கலாம் என்ற வரைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சொத்தின் உரிமையாளர் மட்டுமே அதை செய்ய முடியும். Wafq போர்டில், சியா, சன்னி முஸ்லிம்கள் மட்டும் இருந்தனர். நாம் அதை விரிவுபடுத்தி முஸ்லிம்களின் மற்ற பிரிவினரும் இணைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட நிறைய பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். Wafq போர்டுக்குள் எப்படி முஸ்லிமல்லாதவர்களை கொண்டு வரலாம் என கேட்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, wafq போடு என்பது, முஸ்லிம் மதத்தினர் மட்டும் இருக்கக் கூடியது போர்டு அல்ல. அந்த சொத்தினை நிரூபிக்க கூடியவர்களை முஸ்லிம் மதத்தவராக இருப்பார். ஆனால் அதை கண்காணிக்க கூடியவர், அதில் அனைவரும் இஸ்லாமியவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. Wafq போடில், வழக்கறிஞர், பெண்கள், போன்றவர்கள் தற்போது உள்ளே வர முடியும். அதனால் இதில் இஸ்லாம் மதத்தை சாராதவர்கள் வேலை செய்ய முடியும்.

இதை தற்போது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். அவர்களுக்கு இதில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது செக்க்ஷன் 40, 108 இரண்டையும் தற்போது நீக்கி இருக்கிறோம். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகளின் சொத்துக்களை, wafq போர்ட் பல இடங்களில் தங்களுடைய சொத்துக்களாக எடுத்துள்ளார்கள். அதை கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் எங்குமே சென்று அதை திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. என்று அதை நீக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக இஸ்லாமில் இருக்கக் கூடிய பெண்களுக்கு, பெண்களை சார்ந்த எஞ்சியோக்கள், நிதி உதவி, மைக்ரோ பைனான்ஸ் போன்றவை செய்யப்பட வேண்டும் என wafq சட்டத்திருத்தத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.

அதனால் இது முஸ்லிம் மக்களை ஏற்றுக் கொண்டு இருக்கும் ஒரு சட்டமாக உள்ளது. இதில் நம்முடைய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இல்லாதவர்கள் இதற்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நவீன் பட்நாயக் கட்சியினர், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் உள்ளிட்டோர் வாக்களித்து லோக்சபாவில் 288 ஓட்டுக்கள், ராஜ்ய சபாவில் 128 ஓட்டுக்கள் என கிடைத்து சட்டம் நிறைவேறி இருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சர் மைனாரிட்டி சமுதாயத்தினர் மத்தியில் பயத்தை ஏற்படுத்துவது போன்று பேச வேண்டாம்.

நாங்கள் இந்த சட்டத்தில் அவர்களுக்கு உரிமை கொடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை செய்து இருக்கிறோம். இன்று wafq போர்டுக்கு கீழ் இருக்கக்கூடிய 39 லட்சம் ஏக்கர் நிலம், சம்பாதித்த வருமானம் 126 கோடி ரூபாய். மன்மோகன் சிங் ஆட்சியின் போது, வாஃப்கை சரியான முறையில் நிர்வாகம் செய்தால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் என கூறினார். சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார்,

அதற்குக் காரணமே wafq பிரச்சனைதான். Wafq சொத்தை ஒரு திமுக காரன் அபகரித்து வைத்திருப்பதாக கூறியதின் பெயரில் அவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இன்று என் தி.மு.க இதை எதிர்க்கிறது என்றால், ஊரில் இருக்கும் பாதி wafq சொத்துக்களை தி.மு.க அபகரித்து வைத்திருக்கிறது. ஆனால் இதில் சம்பாதிக்கப்பட்டு இருக்கும் பணம் இஸ்லாமியர்களுக்கு செல்லவில்லை. ஏழை இஸ்லாமிய மக்களுக்கு அந்த பணம் செல்ல வேண்டும். அதனால் இந்த அற்புதமான சட்டத்தை கொண்டு வந்ததற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராட்டுகளையும், நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

அதே போல இரண்டாவது இன்று நடைபெற்ற மருதமலை கும்பாபிஷேக விழா, இன்று மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு நடத்தப்பட்ட கும்பாபிஷேகமாக, அல்லது தி.மு.க காரர்கள் அவர்களுக்கே நடத்திக் கொண்ட மாநாடா என்பதை சந்தேகமாக இருக்கிறது. பக்தர்கள் அனைவரையும் நேற்று மாலையில் இருந்து படிக்கட்டின் வெளியே நிற்க வைத்து உள்ளார்கள். படி ஏற கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர் சேகர்பாபு வின் மனைவியையும் குழந்தையையும், போலீசின் escot போட்டு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் முருகப்பெருமானுக்கு சேவை செய்யக் கூடிய கோவை மக்களுக்கு ஒரு விபூதி கூட கொடுக்கவில்லை. 750 சிறப்பு தரிசன பாஸ் வழங்கப்படும் என கூறினர், ஆனால் அது அனைத்துமே கரை வேட்டி கட்டிய தி.மு.க காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. உண்மையில் மருதமலையின் முருகனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையான பக்தர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அதுபோல நடத்தப்படவில்லை.

அறநிலை துறை அமைச்சரின் மனைவியும் மகனும் கோயம்புத்தூருக்கு டூர் வந்துவிட்டு மருதமலை முருகனை எட்டிப் பார்த்ததைப் போல் வந்து சென்று உள்ளனர். இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் இதனால் தான் அறநிலையத் துறை இருக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஒரு முக்கியமான கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது, மாவட்டத்தின் அமைச்சர் கூட இதில் கலந்து கொள்ளவில்லை. ஏன் அவர்களெல்லாம் இதில் வந்து பங்கேற்க முடியாத? அங்கு மாவட்டத்தின் அமைச்சர் இருந்தால் மட்டும் தானே அந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இந்த வெட்கம் கெட்ட செயலை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அதனால் அமைச்சர் சேகர்பாபு அவர்கள், இதே போல தான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலும் நடந்து கொண்டார். சேகர்பாபுவின் செயல் தொடர்ந்து அத்துமீறலில் இருக்கிறது. முருகன் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார் தக்க நேரத்தில் தண்டனை கொடுப்பார் என நம்புகிறோம் என கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவர் பற்றிய கேள்விக்கு,

புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும், அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் விழா வரியாக பேசுகிறேன் எனக் கூறினார்.

தவெக wafq சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என நடத்தி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு,

போராட்டம் நடத்துவது தவறு கிடையாது, எந்த கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்யலாம். நான் கேட்பது எதற்காக நீங்கள் போராட்டம் செய்தீர்கள் ?, அந்த சட்டத்தில் எந்த புள்ளி தவறு என நீங்கள் நினைக்கிறீர்கள்?, என்பதைத்தான் கேட்கிறோம். தமிழக வெற்றி கழகத்தினர், உங்களின் கருத்துக்களை லெட்டரில் கொடுத்தீர்களா?.. இதில் ஒரு கோடி பேர் சஜஷன் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் தவெ காவில் இருந்து ஒருவர் கூட எதுவும் கருத்து கூறவில்லை. நீங்கள் கருத்து கூறி இருந்தால் நல்ல கருத்தாக இருந்து இருந்தால் நாங்கள் நிச்சயம் எடுத்து இருப்போம். எதுக்கு போராட்டம் செய்கிறோம் என்றே தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கூறிவிட்டு செய்யட்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், அரசியல் கட்சிகளுக்கு அவர்களின் நிலைப்பாடு இருக்க வேண்டும். நாங்கள் சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம், அதில் இருக்கும் சிறப்பு அம்சங்களை சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை. 13 திருத்தங்களை அனைத்து கட்சிகளும் கூறினார்கள் அதை நாங்கள் தெளிவாக செய்து கொடுத்து இருக்கிறோம். அதனால் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்காக ஓட்டு போட்டவர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஓட்டு போடாதவர்கள் கூட வருகின்ற காலத்தில் தங்களுடைய மனதை மாற்றிக் கொள்வார்கள் என நம்புவதாக கூறினார்.

புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேள்விக்கு,

புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி என்னை பொறுத்த வரை கட்சி மென் மேலும் வளர வேண்டும் என்பது தான். நிறைய பேர் உயிரை கொடுத்து புண்ணியம் செய்து கட்சியை வளர்த்து இருக்கிறார்கள். அதனால் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நிறைய பேசுவோம் என கூறினார். இவர்கள் வைத்த நைட்டுக்கான கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து அனுப்பி விட்டார்.

நீங்கள் சொல்லி இருக்கக் கூடிய விஷயங்களையும் காரணங்களையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், நீட் என்பது இந்திய மாணவர்களுக்கும் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும் நல்லது என ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டார். முதலமைச்சரின் நீட் நாடகம் அதிகாரப் பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. இனி அடுத்து அவர் அடுத்த நாடகத்தை தொடங்கலாம். நான் நேரடியாகவே அவருக்கு சவால் விடுகிறேன் சுப்ரீம் போட்டி இருக்க செல்லலாம். ஆனால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டும் செல்ல மாட்டார்கள், ஏனென்றால் நீட் வந்ததே அங்கிருந்துதான். உங்கள் தைரியம் இருந்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்று கூறினார்.

மாநிலத் தலைவராக இருந்தபோது டி.எம்.கே பைல்ஸ் போன்றவற்றை வெளியிட்டீர்கள், மாநிலத் தலைவராக இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு,

மாநிலத் தலைவராக இல்லாவிட்டால் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டீர்களா, ஒரு விவசாயின் மகனாக இருப்பேன் என்னை மறந்து விடுவீர்களா ? எப்பொழுதுமே என்னுடைய பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். அதில் யாராக இருந்தாலும் சமரசனை கிடையாது. ஒரு நாள் இல்லை என்றாலும் மற்றொரு நாள் தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி தொடரும் என கூறினார்.

2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல். நான் ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்து விட்டு செல்வேன் என கூறினார்.

டாஸ்மாக் வழக்கு குறித்த கேள்விக்கு,

தி.மு.க வின் அமைச்சரவையில் 13 பேரின் மேல், இன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றங்களில் நடக்கிறது. இந்த வழக்குகளை எல்லாம் பக்கத்து மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்கலாமே, ஆனால் இதையெல்லாம் எடுத்துவிட்டு டாஸ்மாக் வழக்கை மற்றும் மாற்றுச் சொல்கிறார். இதற்கு ஹை கோர்ட்டில் ஸ்டே வேண்டும் என கேட்டார்கள்.

ஹை கோர்ட்டின் அமர்வு மாறிய பிறகு, முதலமைச்சரின் தலைமையின் கீழ் இருக்கும் அமர்வு, ஐயையோ சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லாம் சொல்ல வேண்டாம் பக்கத்து மாநிலத்திற்கு மாற்றுங்கள் எனக்கு கூறுகிறார்கள். 13 அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது அதை பக்கத்து மாநிலத்திற்கு மாற்றுங்கள் எனக்கு கேளுங்கள் டாஸ்மாக்குக்காக நான் பக்கத்து மாநிலத்திற்கு மாற்றித் தர உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன் என கூறினார்.

நீதிமன்றம் என்றால் நேர்மையாக நியாயமாக இருப்பார்கள் எனக் கூறும் நீங்கள், டாஸ்மாக் வழக்கிற்கு மட்டும் எதற்காக பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.? உங்கள் மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் இருக்கிறது, எதையோ மறைப்பதற்காக நீங்கள் இப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள். அன்னைக்கு டாஸ்மார்க் ஆர்ப்பாட்டத்தில் நான் சொன்னது போன்ற கைதுகள் நிச்சயம் இருக்கும். எனக்கு ED மேல் நிறைய நம்பிக்கைகள் உள்ளது. நேர்மையான முறையில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை நேர்மையான முறையில் அரசாங்கத்திடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறினார்.