திராவிட மாடல் ஆட்சியில் முசோலினி போல் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் போலியோர் விரோத சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கிழக்கு மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தின் மதுரை மண்டலம் சார்பாக, தலைவர் சந்திரசேகர் தலைமையில், மாநில செயலாளர் பாலாஜி முன்னிலையில், பொருளாளர் அமுத அரசன் உட்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
