சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவிலில்10-02-2025 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதனை தொடர்ந்து இன்று 48வது நாள் மண்டல பூஜை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு யாக பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த மண்டலபூஜையானது அறங்காவலர் தலைவர் திருமதி. காளிஸ்வரி சரவணன்,ex mc., தலைமையில் திருப்பணி குழு பொருளாளர் என்ஜினியர் S. சுந்தர மாணிக்கம்,மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் திரு.K. சேகர் .,திரு.விஜயகுமார்,ex.mc, திரு.ராமதாஸ், திரு.ஆறு.சரவணன்,அவர்கள் முன்னிலையில் யாகசாலை நடைபெற்றது. மிகப் பழமையான திருக்கோவிலில் 10-02-2025 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவின் 48 வது நாள் மண்டல பூஜை வைபவம் இன்று நடைபெற்றது முன்னதாக அம்மன் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து அம்மனின் மூல மந்திரங்கள் துர்கா ஹோமங்கள் நடத்தி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பழங்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. பின்னர் கலசங்களுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வளம் வந்து மூலவர் ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மனுக்கு திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பலவகையான நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து சர்வ அலங்காரம் நடைபெற்று கோடி தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன.

நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழு முக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டனர் விழா முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த பூஜையில் ராதா,சேதுபதி, துறை பாண்டி, கர்ணன்,மோகன்,அறிவழகன், பாலு,தாமோதரன்,முத்துசாமி,லக்ஷ்மணன்,ஆறுமுகம், பூசாரி சங்குமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்