விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஆ. பா. செல்வராஜன் தலைமை வகித்தார் அவர் பேசியது சிவகாசிபகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்று மாணவர்களின் அதிநவீன வசதிகளுடன் கூடிய கல்லூரி நூலகத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதை காட்டிலும் ஒரு நிறுவனத்தை வழி நடத்தும் தொழில் அதிபராக உயர வேண்டும் எனவும் கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி இந்து நிறுவன குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நவநீத பேசியது.
இன்றைய சமூகம் பல நெருக்கடிகளிடையே இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியை சமாளிக்க கூடிய உத்திகளை மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்றும் கல்வி ஒன்று அத்தகைய நெருக்கடியை சமாளிக்க வழிவகை செய்யும் என கூறினார். மேலும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு மாணவர்கள் உதவ முன் வர வேண்டும் போதை, மது, போன்ற தீய பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நூல்களை வெளியிடுதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடையங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் .கல்வி புலம் சார்ந்த சாதனை புரிந்த பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். கல்லூரியின் பண்பாட்டு மையத்தின் சார்பில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியை, பெற்றோர்கள், கலந்து கொண்டனர். கணிதவியல் துறை தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.