• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

ByKalamegam Viswanathan

Mar 30, 2025

1221 கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பயனாளிகளுக்கு
ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.

மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் 1221 கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வாங்கினார்கள்.

ஜூன் 2020 முதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து சேவைகளும் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு பெற்ற தொழிலாளர்கள் வாரிய அட்டையை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், விபத்து ஊனம், ஓய்வூதியம், முடக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் (கட்டுமானத் தொழிலாளர்களுக்கு), பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத்தொழிலாளர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டம், தீவிர நோய் பாதிப்பு, கட்டுமானப் பணியிடத்தில் விபத்தில் இறந்த பிற மாநில (புலம் பெயர்ந்த) தொழிலாளர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து செலவினம், பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்குதல், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான பங்குத்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

01.11.2008 முதல் 27.03.2025 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 20 நலவாரியங்களில் 1,88,582 தொழிலாளர்கள் பதிவு பெற்று நடப்பில் உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்காண்டுகளில் மட்டும் 79,977 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். வீட்டுவசதி திட்டம், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் மற்றும் இதர நலத்திட்ட உதவித்தொகைகள் 1,24,234 பயனாளிகளுக்கு ரூ.108,07,67,177/- (ரூபாய் நூற்று எட்டு கோடியே ஏழு இலட்சத்து அறுபத்து ஏழாயிரத்து நூற்று எழுபத்து ஏழு மட்டும்) வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டத்தின்கீழ், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 100 பயனாளிகளுக்கு ரூ.1,75,00,000/- (ரூபாய் ஒரு கோடியே எழுபத்து ஐந்து இலட்சம் மட்டும்) ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை வழங்கப்படுகிறது. மேலும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா 1121 பயனாளிகளுக்கு ரூ.82,17,300/-(ரூபாய் எண்பத்து இரண்டு இலட்சத்து பதினேழாயிரத்து முந்நூறு மட்டும்) ஆக மொத்தம் 1221 பயனாளிகளுக்கு ரூ.2,57,17,300/- (ரூபாய் இரண்டு கோடியே ஐம்பத்து ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முந்நூறு மட்டும்) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், செயலாளர் கே.ஜெயபால் , கூடுதல் தொழிலாளர்ஆணையர் திருமதி.உமாதேவி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.