• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குமரி தக்கலையை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெண்கள்,மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் IPS எச்சரிக்கைகடந்த 13.03.25 அன்று 8 வது மற்றும் 6 வது வகுப்பு படிக்கும் இரு பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு சென்றனர். இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறையினர் இரு பள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் . 100 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகள் ஆய்வு செய்து, தொழில் நுட்ப உதவியுடன் போலீசார் இருபள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்டனர் இந்த வழக்கில் தக்கலை இலப்பகோணம் பகுதியை சார்ந்த ராஜன் என்பவர் மகன் அஜித்குமார் என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போக்சோ குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஸ்டாலின் IPS உத்தரவிட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா IAS குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.