• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அன்னை நல்லதங்காள் வரலாற்று நூல் வெளியீடு – கவிஞர் குடியரசி விஜயா

ByP.Thangapandi

Mar 29, 2025

உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து அன்னை நல்லதங்காள் என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் தனது 7 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரிழந்து தெய்வமான நல்லதங்காள் குறித்து தமிழ்நாடு முழுவதுமாக பேசப்படும் வாய் மொழி தரவுகளையும், வரலாற்று உண்மைகளையும் ஆய்வு செய்து நல்லத்தேவன்பட்டியைச் சேரந்த கவிஞர் குடியரசி விஜயா என்பவர் அன்னை நல்லதங்காள் என்ற பெயரில் வரலாற்று நூலை எழுதி இன்று இந்த கோவிலில் வெளியிட்டார்.,பாரதிய பார்வட் ப்ளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜி இந்த வரலாற்று நூலை வெளியிட உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், திமுக நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி மற்றும் பல்வேறு பார்வட் ப்ளாக் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நல்லதங்காள் வழிவழி வந்த வாரிசுகள் வரலாற்று நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்தினர்.,தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட நல்லதங்காள் சாமியின் வரலாறு பல்வேறு வகையான வடிவில் சொல்லப்படுகிறது. இந்த வரலாற்று நூலை வாசிக்கும் போது உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும், மதுரை மாவட்டத்தின் எதார்த்த மொழி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதால் 1ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளும் படித்து வரலாற்று அறிந்து கொள்ளும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளதாக நூல் ஆசிரியர் கவிஞர் குடியரசி விஜயா தெரி்வித்தார்.