• Fri. May 3rd, 2024

எஸ்பிஐ அறிவித்த புது விதிமுறை…இனி இது கட்டாயம்

Byகாயத்ரி

Nov 30, 2021

எஸ்பிஐ ஏடிஎம்களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

பணம் எடுக்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ கூறியுள்ளது.அதே போல் நாளை முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 99 ரூபாய் தனி வரி செலுத்த வேண்டும். அனைத்து வணிகர் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் 99 ரூபாய் மற்றும் செயலாக்க கட்டணமாக வரி செலுத்த வேண்டும் என்ற எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *