• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கூட்டணி பொறுத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் – எடப்பாடி பழனிச்சாமி

ByPrabhu Sekar

Mar 26, 2025

கூட்டணி பொருத்தவரை அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும், திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் ஒரே இலக்கு, அதற்கான அனைத்து முயற்சிகளும் அதிமுக செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீரென சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார் டெல்லியில் கட்டி முடிக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டு அவர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்,இதையடுத்து டெல்லியில் இருந்து சற்று நேரத்திற்கு முன்பு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அவரை சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னய்யா, சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி கந்தன், தன்சிங் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

,இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்..

,நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததை யாரும் விமர்சனம் செய்யவில்லை ஊடகம் தான் பரபரப்பான செய்தியாக காட்டுகிறது,ஏற்கனவே நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் சந்தித்தேன் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவு படுத்திவிட்டேன். நேற்று டெல்லி சென்றவுடன் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை பார்வையிட்டேன். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நானும் கழகத்தின் மூத்த நிர்வாகிகளும் சேர்ந்து சந்தித்தோம், அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனு அவர்களிடம் வழங்கினோம்,பாஜக உடன் கூட்டணி இல்லை என கூறிய நீங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து உள்ளதா, திமுக கூட்டணி கட்சிகள் நிலையாக உள்ளதா இதையெல்லாம் சரியாக சொல்ல முடியாது,இது அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றம் இருக்கும்,.2019 நாடாளுமன்ற தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் நெருக்கத்தில்தான் கூட்டணி குறித்து நாங்கள் அறிவித்தோம்.

அதே போல் தற்போது தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து ஒத்த கருத்துகள் உடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அதிமுக கூட்டணி அமைக்கும் போது அனைத்து ஊடகங்களையும் அழைத்து நிச்சயம் தெரிவிப்போம் அதிமுக பொருத்தவரை திமுகவை வீழ்த்துவதுதான் எங்கள் ஒரே குறிக்கோள், மக்கள் விரோத திமுக ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும் அதுதான் எங்களது இலக்கு அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும் இவ்வாறு கூறினார்,