• Sun. Apr 28th, 2024

ராஜினாமா செய்தார் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி

Byமதி

Nov 30, 2021

ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர். பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. இவர், அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ குறித்து முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஜேக் டோர்சி நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் டுவிட்டரை விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், டுவிட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேக் டோர்சி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜேக் டார்ஸியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தது. டார்ஸி ட்விட்டர் நிறுவனத்தின் மீது சரிவர கவனம் செலுத்தவில்லை மாறாக அவர் தான் நடத்தும் ஸ்கொயர் இன்க் நிறுவனத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவதாகவும் புகார் எழுந்தது.

டோர்சியின் ராஜினாமா குறித்த தகவல் வெளியான பின்னர் பங்குச்சந்தையில் டுவிட்டர் பங்குகள் இன்று 11 சதவீதம் உயர்ந்ததுள்ளது.

இந்நிலையில், ஜேக் டார்ஸிக்கு பதிலாக தொழில்நுட்ப தலைவராக இருந்த பரக் அகர்வால் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனமே இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பரக் அகர்வால் மும்பை ஐஐடியில் பயின்றவர். பின்னர் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *