மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட , வார்டு எண் 100, அவனியாபுரம், பகுதியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 169 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் அவனியாபுரம் காவல்துறையினர், பொதுமக்கள் என பலர் கொண்டனர்.