• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜாகீர் உசேன் கொலை வழக்கில் பரபரப்பு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலைவழக்கில் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜாகீர் உசேன்

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அந்தப் பகுதியில் வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக சட்ட வழக்குகளை எதிர்த்துப் போராடும் ஒரு ஆர்வலர் என்றும், சிலரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மற்றும் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.