மதுரையில், நிறங்களின் வழியே உலகம் என்ற தலைப்பில், ஓவியர்
க.அருந்தமிழ் இலக்கியாவின் ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வண்டியூர் கிளை, மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில், மதுரை அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியத்தில் வரும் சனி மற்றும் ஞாயிறு (29.03.25 மற்றும் 30.03.25) ஆகிய நாட்களில், நிறங்களின் வழியே உலகம் என்ற தலைப்பில், ஓவியர் க.அருந்தமிழ் இலக்கியாவின்
ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது.
கதைசொல்லி பசுமலை பாரதி தலைமையில் துவங்கும். இந்த ஓவியக் கண்காட்சியில், கவிஞர் செ.தமிழ்ராஜ் வரவேற்புரையற்றுகிறார். ஓவியர், சிற்பக்கலைஞர் வ.சரண்ராஜ் கட்சியை திறந்து வைக்கிறார்.
மதுரை அருங்காட்சியகம் காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன்,சோக்கோ துணை இயக்குநர் செல்வகோமதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஓவியர் வெண்புறா, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஓவியர் ஸ்ரீரசா குத்து விளக்கு ஏற்றுகின்றனர். எழுத்தாளர் ப.கவிதா குமார் நன்றியுரையற்றுகிறார்.