கரூரில் வரும் மே 1ம் தேதி இசை அமைப்பாளர் இளைய ராஜாவின் இசைக் கச்சேரி நடைபெறுவதை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளையராஜா மாஸ்க் அணிந்து திருவாசகம் பாடி டிக்கெட் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
கரூரில் வரும் மே மாதம் 1ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிக்கெட் விற்பனை இன்று தொடக்க விழா கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளையராஜாவின் மாஸ்க் அணிந்து திருவாசகம் பாடினர்.
அதனை தொடர்ந்து குழந்தைகளுடன் டிக்கெட் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது, இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடப்பட்டதை காண ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இளையராஜா லண்டனில் சிம்பொனி முடிந்து வந்து நடைபெறும் முதல் மேடை கச்சேரி என்பதால் இளையராஜா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.