தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், கஞ்சா, விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும், நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதனை விற்பவர்கள் பல்வேறு இடங்களில் ரகசியமாக தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து சாத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சாத்தூர் பகுதியில் இருந்து தாயில்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு காரில் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. சாத்தூர் டி எஸ்பி நாகராஜன் வெம்ம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் சப்-இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன், குருநாதன் ஆகியோர் தலைமையில் மண்குண்டம்பட்டி முக்கு ரோட்டில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த சொகுசு காரை ஓட்டி வந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காரை சோதனை இட்டனர். அதில் நான்கு முடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகள் இருந்து தெரிய வந்தது. உடனடியாக புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த நபரை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தாயில்பட்டி அருகே உள்ள இறவார்பட்டி கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ஈஸ்வரன் வயது 19 என்பது தெரிவந்தது. இவர் சாத்தூர் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் என்பதும் தெரியவந்தது. உடனடியாக ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். உடன் இருந்த இறவார்பட்டியை சேர்ந்த கருப்புசாமி தப்பி ஓடினார். மேலும் தொடர்ந்து ஈஸ்வரனிடம் விசாரணை நடத்தியதில் பல் பாக்கெட்டுகள் விற்பனை தொடர்பாக மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அது குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் மட்டும் போலீசாருக்கு துணை சூப்பர் நாகராஜன் பாராட்டு தெரிவித்தார். மேலும் புகையிலைக் கடத்திய கல்லூரி மாணவன் என்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
