விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் எட்டாம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சமந்தாபுரம் ஜாஸ்மின் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ் டி பிஸ ஐ கட்சி நகர தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். நகர செயலாளர் திவான் முகமது முன்னிலை வகித்தார், பொருளாளர் சையது அபுதாகிர் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் இமாம் கஸ்கன் பைஜி அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள் உலாமா பெருமக்கள் மற்றும் எஸ்டிபிஐ மாவட்ட, நகர, ஒன்றிய, வர்த்தக அணி, தொழிற்சங்க நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்தார் நோன்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.