• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரோஜா மலர்களின் விலை குறைவால் – பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி வரும் சூழல்..

ByP.Thangapandi

Mar 21, 2025

உசிலம்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் ரோஜா மலர்களின் விலை குறைவால் – பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி வரும் சூழல் உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுபட்டி, வகுரணி, கள்ளபட்டி மற்றும் கல்லூத்து, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, பன்னீர் ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்தன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக குறைந்துள்ளது, அதன்படி பன்னீர் ரோஜா கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும், மல்லிகை 250 முதல் 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதில் பன்னீர் ரோஜா கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகும் சூழலில் பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் செடிகளிலேயே பறிக்காமல் விடுவதால் செடிகளிலேயே கருகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் உசிலம்பட்டி பகுதியில் நறுமண தொழிற்சாலை மற்றும் மலர் குளிர்பதன கிடங்கி அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வரும் சூழலில் அரசு விரைவில் அமைத்து கொடுத்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.