• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து..

BySeenu

Mar 20, 2025

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தனர். அதன்படி கடந்த 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி வரும் மின் கட்டணம் மற்றும் இதர துணை கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அது ரத்து செய்யப்பட்டவில்லை என்றனர். மேலும் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டான இந்த வருடமும் மின் கட்டணத்தை உயர்த்தி விடக்கூடாது என தெரிவித்தனர், 12kw மின் நுகர்வோர்களுக்கு 3B யில் இருந்து 3A மாற்ற சட்டசபையில் அறிவித்தும் அரசாணை வெளியீட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாக தெரிவித்த அவர்கள் அரசு உடனடியாக அதனை நடவடிக்கையில் எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தொழிற்சாலை கூரையின் மீது அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்படும் 15% கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறினர். மேலும் தொழிலாளர்களின் உடல் நலன் மற்றும் தொழில்துறை நலன் கருதி மதுக்கடைகளை பகல் நேரத்தில் திறப்பதை தவிர்த்து மாலை நேரங்களில் கடைகளை திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகம் அமைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை MSME தொழில்துறையினர் பாதிக்காத வண்ணம் அமைத்திட வேண்டும் எனவும் QOC BIS சட்டங்களை ரத்து செய்திட மத்திய அரசிடம் சிறப்பு கவன தீர்மானம் இயற்றி வலியுறுத்த வேண்டும் என கூறினர்.

மேலும் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 9ம் தேதி கோவையில் மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதில் தொழில்துறை மட்டும் அல்லாமல் அனைத்து சங்கங்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் தற்போதைய தமிழக பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று இருப்பதாக விமர்சித்தனர். கொரோனாவிற்கு பின்பு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதற்கு கடன்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வு தான் என்றனர். 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் என்ன அறிவிப்பார்களோ என்ற பயமும் தங்களுக்கு இருப்பதாக கூறினர்.

மகாராஷ்டிரா ஆந்திரா குஜராத் போன்ற மாநிலங்கள் போட்டி மாநிலங்களாக இருக்கின்ற பட்சத்தில், அங்கு தரக்கூடிய மானியங்களுக்கு இணையாக தங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் அதே சமயம் அறிவிப்பை வெளியிட்டாலும் அதற்கான நிதி எங்கிருக்கிறது? என தெரியவில்லை என்றனர்.

மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் அறிவிப்பிற்கு சில தொழில்துறையினர் நன்றி தெரிவிப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர்கள் அரசிடம் இருந்து அறிவிப்புகள் வரும் பொழுது நன்றி தெரிவிப்பது தங்களுடைய மரபு எனவும் அதற்காக தேனாறும் பாலாறும் ஓடியதாக அர்த்தமில்லை என குறிப்பிட்டனர்.

முதன்மையான தொழில் இருக்கக்கூடிய கோவைக்கு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் கிரீம் பன் பற்றி ஒரு மணி நேரம் பேசி விட்டு சென்று விட்டதாக தெரிவித்து அவர்கள் கார்ப்பரேட் செக்டாரில் இருப்பவர்கள் எளிதில் அரசு அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் நிலவி வருவதாகவும் ஆனால் இவர்களுக்கு பின்னால் இருக்கும் சிறு குரு நடுத்தர தொழில் துறையினர் இவர்களுக்கு பின்னாலேயே போல் இருப்பதாக தெரிவித்தனர். எந்த காலகட்டத்திலும் எந்த அரசு வந்தாலும் கார்ப்பரேட் செக்டாரில் இருப்பவர்கள் தான் முன்னாள் நின்று அரசை இயக்குகிறார்கள் எனவும் இதனை மாற்ற வேண்டும் அதற்கு இந்தக் கூட்டமைப்பு வலுபெற வேண்டும் என தெரிவித்தனர்.