• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருவாரூர் ஜல்லி ஏற்றி சென்ற கனரக வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்து.,

ByR. Vijay

Mar 20, 2025

காரைக்கால் மாவட்டத்திலிருந்து திருவாரூருக்கு ஜல்லி ஏற்றிச்சென்ற கனரக வாகனம் நாகை திருவாரூர் புறவழி சாலையில் கீழ்வேளூர் அருகே குறுக்கத்தி செல்லும் போது சாலையில் இடதுபுறம் இறங்கி உள்ளது. வயல்வெளி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் வாய்க்காலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கனரக வாகனம் இடதுபுறமாக வாய்க்காலில் கவிழ்ந்து நின்றதால் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீசார் ஓட்டுநரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.