• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

ByAnandakumar

Mar 19, 2025

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.