• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம்… கொலைகாரியாக மாறிய 12 வயது சிறுமி…

கேரள மாநிலம் கண்ணூருக்கு பக்கத்தில் உள்ள பாப்பினிசேரி பரக்கால் என்ற இடத்தில், பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவத்தில், இறந்த குழந்தையின் பெரியப்பா மகள் 12 வயது சிறுமி, வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூருக்கு பக்கத்தில் உள்ள பாப்பினிசேரி பரக்கால் என்ற இடத்தில் வசித்து வருபவர்கள் முத்து – அகல்யா தம்பதி. தமிழ்நாட்டுச் சேர்ந்த இவர் அங்கு குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுடன் முத்துவின் அண்ணன் மகள் 12 வயது சிறுமி ஒருவரும் வசித்து வருகிறார். தந்தையை இழந்த சிறுமியை முத்து தான் வளர்த்து வந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்து-அகல்யா தம்பதிக்கு குழந்தை பிறந்தது. முத்து-அகல்யா தம்பதிக்கு குழந்தை பிறந்த பிறகு, அவர்கள் தனியாக சென்றுவிடுவார்களோ, வளர்ப்பு தந்தைக்கு தன் மீது உள்ள பாசம் குறைந்து விடுமோ என்று பயந்துள்ளார் அந்த சிறுமி. இதனால், அந்த குழந்தையின் மீது பொறாமை ஏற்பட்டு குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறார்.

சம்பவம் நடந்த நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார் சிறுமி. பின்னர், வீட்டில் உள்ளவர்களிடம் குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார். வீட்டில் இருந்தவர்களும், ஊரில் உள்ளவர்களும் குழந்தையை தேடினர். பின்பு, போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் பொதுமக்களும் தேடிய போது
அந்த குழந்தை, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் பிணமாக கிடந்தது. இறந்த குழந்தையின் உடலை போலீசார் மிட்டனர். பின்னர் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது, வெளியில் இருந்து யாரும் வீட்டிற்குள் வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. எனவே, வீட்டில் இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதுகுறித்து இறந்த குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரித்த போது, பெற்றோர்கள் வேலைக்கு போகும்போது, அந்த சிறுமி தான் குழந்தையை பார்த்துக் கொள்வது வழக்கம் என தெரிவித்தனர். இதனால் அந்த 12 வயது சிறுமியிடம் மட்டும் போலீசார் தனியாக விசாரித்தனர். போலீசார் விசாரித்ததில், குழந்தை பிறந்ததால் வளர்ப்பு தந்தையான சித்தப்பாவுக்கு தன் மீதுள்ள பாசம் குறைந்து விடுமோ, அவர்கள் தன்னை விட்டு விட்டு சென்று விடுவார்களோ என்ற பயத்தினால் அந்த சிறுமி குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து சிறுமியை, குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.