வண்டலூர் காப்புக்காடுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சாப்பிட்டு மான்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளில் முயல், மான்கள், நரி உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மான்கள் இந்த காடுகளில் உள்ளன.
இந்த காடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் வண்டலூர் பெருங்களத்தூர் பகுதிகளில் காப்பு காடுகளில் ஓரம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதால் மான்கள் உணவை தேடி வரும் போது ,பிளாஸ்டிக் குப்பைகளை தின்று காடுகளில் உயிரிழக்கிறது.
தொடர்ந்து மான்கள் உயிரிழப்பு வண்டலூர் காப்புக்காடுகளில் அதிகரித்து வருகிறது. காப்பு காடுகளை சுற்றி பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், மான்களை பாதுகாக்கவும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.