• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆம்னி வேன் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

ByAnandakumar

Mar 16, 2025

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் அதிஷ்டமாக உயிர் தப்பினர். – தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தமிழகத்தில் தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வாகனங்கள் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த பேட்டரி வாகனம் திடீரென தீ பற்றி எரிந்து நாசமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி கட்டபொம்மன் சிலை அருகே உள்ள மேம்பாலத்தில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் குளித்தலைக்கு சுப நிகழ்ச்சிக்கு ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் பின்புறத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அதைத் தொடர்ந்து சாலையில் சென்ற பொதுமக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆம்னி வேனில் பயணம் செய்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் பத்திரமாக ஆம்னி வேனில் தீ பற்றிய உடனே கீழே இறங்கியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.