கன்னியாகுமரி அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை: கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மறக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் இவருக்கும் இதே ஊரை சேர்ந்த 27 வயது ஜெனிபருக்கும் கடந்த 2022 ம் ஆண்டு திருமண நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15)ம் தேதிக்கு முன்தினம் ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உடல் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ஜெனிபரின் தாய் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் உடனடியாக புறப்பட்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.
இதனிடையே ஜெனிபர் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.