சென்னை கறி தியரி மதுரையில் -வாடிக்கையாளர்களை கவர மதுரையில் 30 நாட்கள் நடைபெறும் வெவ்வேறு வகையான அசைவ உணவுகள் திருவிழா -மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி வாடிக்கையாளர்களை கவர்ந்த பணியாளர்கள்.
நம்முடைய அன்றாட உலகில் நாம் உயிர் வாழ நீர் எவ்வாறு இன்றியமையாததோ அதேபோலதான் உணவு.நமக்கு பிடித்த உணவுகளை ருசியாக சமைத்து வகை வகையான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் மதுரை சிந்தாமணி அருகே உள்ள (GRT கிராண்ட்ஹோட்டல்ஸ்) நேற்று புதுவித அசைவ வகைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

குறிப்பாக மதுரக்காரங்க எதையுமே ரசிச்சு ருசித்து சாப்பிடுவாங்க அந்த வகையில மதுரையில் இருக்கக்கூடிய இந்த ஹோட்டல்ல வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் தவறும் வண்ணம் வெவ்வேறு விதமான உணவு வகைகள் குறிப்பாக சிக்கன் மட்டன் மீன் ஈரால் நண்டு இப்படி ஒவ்வொரு வகையிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் தயார் செய்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
லாலிபாப் சிக்கன் ஸ்பெஷல் சிக்கன் என குறித்து தயாராக வைக்கப்பட்டிருந்ததில் மதுபானத்தை ஊற்றி அதன் சிறப்பு தனக்கே உரிய பாணியில் தீயை பற்றவைத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இவை ஒருபுறம் இருக்க இன்றைய சூழலில் எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் மதுப்பாட்டு இல்லாமல் கிடையாது.
அந்த வகையில் மதுபானத்தை வழங்கக்கூடிய இளைஞர்களும் தங்கள் பங்கிற்கு லாவகமாக பாட்டில்களை சுழற்றி பொறக்க வெட்டும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் எப்படி காக்டெயில் கொடுக்க வேண்டும் என்பதை டெமோ செய்து காண்பித்தார்கள்.
சமையல் கலைஞர்கள் ஒருபுறம்,மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊழியர்கள் ஒருபுறம் என தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை செய்து காண்பிக்க,
இவற்றை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய (பரிமாறக்கூடிய) ஊழியர்கள் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல திரைப்படப் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

அதிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரோ தமிழ் பாடல் அர்த்தம் புரியவில்லை என்றாலும் சக தோழிகளோடு ஆடி அனைவருடைய கவனத்தையும் இருத்தனர். கிச்சன் கிளியே சமைக்க கூடிய செப்புகள் ஆள் உயரத்திற்கு நெருப்பு வருவதைப் போன்று சமையல் நுணுக்கங்களை தங்கள் பங்கிற்கு எடுத்துரைத்தனர். இவற்றையெல்லாம் பரவித்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையிலே இந்த ஹோட்டலின் 30 ஆண்டு காலம் பணியாற்றக்கூடிய சீனியர் செஃப் பேசுகையில்,
வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் நாங்கள் 30 நாட்கள் நடைபெறக்கூடிய சென்னையில் மிகவும் பிரபலமான இந்த கறி தியரி திருவிழாவை கொண்டாடுகிறோம்.எங்களுடைய வாடிக்கையாளர்களுடைய தேவையறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நாங்கள் உடனடியாக சமைத்து தருகிறோம்.
எந்த ஒரு ரசாயன கடமையோ உணவு மற்றும் பிற அசைவ உணவுகளில் நாங்கள் சேர்ப்பது கிடையாது இயற்கையான முறையிலேயே இவற்றை நாங்கள் தயார் செய்கிறோம். எங்களது உணவு விடுதிக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு இருக்கக்கூடிய உணவுகளை விரும்பி அருந்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து நாங்கள் இவற்றை செய்து வருகிறோம். குறிப்பாக மதுரையில் இருக்கக்கூடியவர்களை கவரும் வண்ணம் இந்த 30 நாட்கள் இந்த உணவு திருவிழாவிற்காக நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.