உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது காரில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒரு பெண் உள்பட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு திருப்பூரிலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சீமானுத்து விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையில் சந்தேகப்படும்படி வந்த கருப்பு நிற காரை இடைமறித்து சோதனை செய்ததில் அதில் சுமார் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் தொடர்பாக உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் தெருவைச் சேர்ந்த கௌசல்யா, திருப்பூர் மாவட்டம் நல்லூத்துப்பாளையத்தைச் சேர்ந்த உதயக்குமார் என்ற இருவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரு செல்போன்களையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.