புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தற்போது மும்மொழி கொள்கையை எதிர்த்து சட்டசபையில் இருந்து திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது நாடகம் என்று அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார்
இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மும்மொழி கொள்கை என்று தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு வரை புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர், தேசிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது அப்போதெல்லாம் திமுக மௌனமாக இருந்துவிட்டு இன்று மும்மொழிக் கொள்கை எதிர்த்து வெளிநடப்பு செய்வது என்பது நாடகமாகும் என்று குற்றம் சாட்டினார்.

மாணவர்களையும் பெற்றோர்களையும் முட்டாளாக்க கூடிய செயல்களை காங்கிரசும் திமுகவும் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அன்பழகன், சட்டமன்றத்தின் நேரத்தை வீணாக்கி சபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர் இவர்களின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் புதியதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றால் இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார் இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்று அவர் தெரிவித்தார்.