உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெருவில் 300க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.,இந்த பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாத சூழலில், தனிநபரின் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தனிநபரும் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு நீர் செல்லும் வழியை அடைத்ததால் கழிவு நீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்குவதால் நோய் தொற்று ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நகர் மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தலைமையிலானோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.





