ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீர் என்று பழுதானதால் அரசு பேருந்து அடியில் சிக்கி விபத்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் இருசக்கர வாகன ஓட்டி உயிர் தப்பினார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வடிவேல் கரை செல்லும் அரசு பேருந்து காளவாசல் வழியாக டிவிஎஸ் ரப்பர் ஃபேக்டரி அருகே வந்து கொண்டிருந்தது.

இதை வெங்கட்ராமன் வயது 45 என்பவர் அரசு பேருந்தை ஒட்டி வந்துள்ளார் இந்த நிலையில் அச்சம்பத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சம்பட்டி புறம் நோக்கி ஒருவர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்பொழுது திடீரென நடு சாலையில் இருசக்கர வாகனம் பழுதாகி அங்கே நின்று விட்டது அப்பொழுது இதை கவனித்த அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கட்ராமன் சடன் என்று பிரேக் அடித்தார்.

அப்பொழுது பேருந்துக்கு அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது நூல் நிலையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் ஓட்டுனரின் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியான நேரத்தில் ஓட்டுனர் கவனித்து வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியதால் இருசக்கர வாகன ஓட்டி லேசான காயத்தில் தப்பினார் ஓட்டுநரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.





