குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்குங்கள்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்களை பார்த்து ஒன்றிய கல்வி அமைச்சர். தமிழக மக்கள் கலாச்சாரம் இல்லாதவர்கள் என்று ஒருமையில் பேசியதை கண்டித்து தமிழக மக்கள் எழுப்பிய கண்டன குரல்,போராட்டத்திற்கு பணிந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் அவர் தமிழர்களுக்கு எதிராக வார்த்தைக்காக நூறு முறை மன்னிப்பு கேட்டு படித்தபின் நாடாளுமன்ற சூழல் இயங்கும் நிலைக்கு வரும்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,கருமமே கண்ணாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை. குமரி மாவட்டம் ஒரு சர்வதேச சுற்றுலா மையம். சுற்றுலா வளர்ச்சிக்காக, மேம்பாட்டிற்காக ரூ.2000_ம் கோடி நிதி ஒதுதுக்குங்கள் என கோரிக்கை வைத்தார்.
இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும். அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களவையில் 377 ஆம் விதியின் கீழ் இந்த முக்கியமான கோரிக்கையை வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். மிக தெளிவான கடற்கரைகள், விண்ணை எட்டி நிற்கும் மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என்று கண் கவர் இயற்கை எழிலை கொண்டது. எங்கள் மாவட்டம். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கடலில் கண்ணாடிப் பாலம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற உலக புகழ் வாய்ந்த சுற்றுலா மையங்கள் இங்குள்ளது. கடந்த வருடம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குமரிக்கு வருகை தந்துள்ளனர்.
ஆனால் இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இங்குள்ள சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய மற்றும் இயற்கை தளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம். கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைந்து, வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கன்னியாகுமரியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த பிரேத்தியோக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் இதற்காக ரூபாய் 2000 கோடியினை சிறப்பு நிதியாக ஒதுக்கி உலக சுற்றுலா வரைபடத்தில் குமரியை இடம் பெற செய்ய ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.