விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை வகித்தார்.
பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஓவிய போட்டி ,கட்டுரை போட்டி, கபடி போட்டி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.