• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் மோசடி.., இரண்டு பேர் கைது… ரூ.15 லட்சம் பறிமுதல் !!!

BySeenu

Mar 10, 2025

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டனர். அதன் அடிப்படையில் ஏராளமானவர்கள் இரண்டு பேருக்கும் தினமும் பணம் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு விழுவதில்லை, சிலருக்கு மட்டும் பரிசுத் தொகை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தனர். இவ்வாறு லட்சக்கணக்கில் ரூபாய் மோசடி நடைபெறுவதாக, ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அனுப்ப போலீசார் அங்கு சென்று அவர்களது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆன்லைன் லாட்டரி மோசடிக்காக தனியாக செல்போன்களை பயன்படுத்தி வந்ததும், ஏராளமானவர்களிடம் பணம் சுருட்டியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கண்ணன், ராஜசேகர் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஆன்லைன் லாட்டரி மோசடி மூலம் கிடைத்த பணத்தில் வாங்கிய 213 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். லாட்டரி மோசடிக்கு பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் சிக்கியது. கைதான இரண்டு பேரும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.