• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

18ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சாமி தரிசனம்

ByKalamegam Viswanathan

Mar 8, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11 மணியளவில் வருகை தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு கோவில் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. ரஜினிகாந்தின் மகள் அழகர் கோவிலுக்கு வந்ததை அறிந்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். ஒரு சிலர் ரஜினிகாந்த் மகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் மதுரை மாவட்டரஜினிகாந்த் நற்பணி மன்ற இளைஞரணி செயலாளர் காமாட்சி உடன் வந்திருந்தார்.