கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவே. கணேசன் ஆலோசனைப்படி நல்லூர் வடக்கு ஒன்றிய ஒன்றிய துணை செயலாளர் அன்புக்குமரன் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர் மகளிர் மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமை ஒன்றிய துணைச் செயலாளர்கள் பூலாம்பாடி அண்ணாதுரை, மாரிமுத்தாள் குணா,மற்றும் நிர்வாகிகள் சாத்தியம் மஞ்சமுத்து, கொத்தனூர் சின்னசாமி ஆசிரியர், பெரியநெசலூர் ஐயப்பன் வண்ணத்துர் பெருமாள், நல்லூர் ரஞ்சித் குமார், ஒன்றிய மருத்துவர் அணி அமைப்பாளர் மெடிக்கல் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தனர்.
மேலும், இம்முகாமில் சேப்பாக்கம், நகர், நல்லூர், வண்ணாத்தூர், இலங்கியனூர், மேமாத்தூர், தருசு, கண்டப்பன்குறிச்சி, கொத்தனூர், என்.நாரையூர், திருப்பெயர், வேப்பூர், ஐவதக்குடி, ஆதியூர், காட்டுமைலூர், சித்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.