• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

க்யூ ஆர் கோடு ஒட்டிய ஆட்டோக்களை அறிமுகம் செய்த முதலமைச்சர்

Byவிஷா

Mar 7, 2025

சென்னையில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட ஆட்டோக்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் இன்று நடைபெடற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதையடுத்து வாகனங்களில் ஒட்டப்பட்ட குறியீட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இத் கியூஆர் கோடு மூலம், ஆட்டோ அல்லது வாடகை கார்களில் செல்லும் பயணிகள் எதிர்பாராத சமயத்தில் ஆபத்து நேரிட்டால் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
இதைத்தொடர்ந்து, சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, தலைமை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.