• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோணியம்மன் கோவில் தேரோட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம் !!!

BySeenu

Mar 5, 2025

கோவையில் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கிறது. மேலும் தேர்தல் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஐவீதி,ஒப்பணக்கார வீதி, பிரகாசம், வைசியாள் வீதி
வழியாக தேர் மீண்டும் தேர்நிலை திடலை வந்தடையும் முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவிங்கலால் அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்து வழிப்பட்டனர்.

மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டும். வைசாள் வீதி, சிட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை அசோக் நகர் ரவுண்டானா சிவாலய சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து செல்லலாம்.

மருதமலை சாலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்த பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தடாகம் சாலையில் இருந்து காந்தி பார்க், பொன்னேராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலய சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம்.

உக்கடத்தில் இருந்து ஒப்பனைக்கார வீதி வழியாக தடாகம் சாலை, மருதமலை சாலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலய சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையா ராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம்.

சுகுவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகரக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசாள் வீதி, கே.ஜி வீதி ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனமும் நிறுத்தம் அனுமதி இல்லை, இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர் செல்லும் போது பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்க கூடாது. பக்தர்கள் அதிக ஒளியை எழுப்பக் கூடிய ஊதுகுழ்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர யாரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தேரை நெருங்கக் கூடாது. அப்படி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.