அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று (மார்ச்_3)இரவு வாகன பவனி மற்றும் அய்யாவழி மாநாட்டோடு அவதார தின விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு, இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு வரை அவதார தின பேரணி செல்வதால் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி மார்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
