மகா சிவராத்திரி முன்னிட்டு மயிலாடுதுறையில் பல சிவாலயங்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தும் கிராமங்களில் சிறுவர் சிறுமிகள் கலை நிகழ்ச்சிகள் செய்தும் இறை வழிபட்டனர் .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனுகிஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தார்கள் அதனை தொடர்ந்து அந்த ஆலயத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது பொதுமக்களுக்கு பசிக்கு உணவு அளிக்கப்பட்டது. அதேபோல் திருவிழந்தூர் பகுதியில் சிவன் சன்னதியில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து மன்னம்பந்தல் கிராமத்தில் சிவாலயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது அதன் ஒரு பகுதியாக சிறுவர் சிறுமியர்கள் சிலம்பாட்டம், மண் கொம்பு சுருள் பட்டை ஆகியவைகளை கொண்டு விளையாடி பொதுமக்களை வியக்க வைத்தனர். இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்விழித்து சாமி தரிசனம் செய்தார்கள்.