• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் துவங்கப்பட்ட முதல்வர் மருந்தகம்…

முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டது. சென்னை – 33, மதுரை – 52, கடலூர் – 49, கோவை – 42, தஞ்சை – 40 உள்ளிட்ட 1000 இடங்களில் திறக்கப்பட்டது.

சந்தை விலையை விட இங்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும்.

குமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில், முகிலன் விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே முதல்வர் மருந்தகம் துவங்கப்பட்டது.

நிகழ்வில் குமரி மாவட்டம் ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் பங்கேற்றார்கள்.