திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக கவுன்சிலர் முகத்தில் திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரி துப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகர்மன்ற தலைவர் வெண்ணிலா மற்றும் துணைத் தலைவர் பரமகுரு மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 13 வது வார்டு திமுக கவுன்சிலர் தனபால் என்பவர் பேசும்பொழுது, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் நகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதனால் திமுகவை சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகர செயலாளருமான பரமகுரு என்பவருக்கும், திமுக நகர் மன்ற உறுப்பினர் தனபாலுக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்பொழுது ஆத்திரமடைந்த நகர மன்ற துணைத் தலைவர் பரமகுருவும், திமுக கவுன்சிலர் தனபாலும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்டனர். மேலும் துணைத்தலைவர் பரமகுரு ஆத்திரமடைந்து கவுன்சிலர் தனபால் மீது காரி துப்பிய சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த கவுன்சிலர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்தனர். திமுகவினரே நகர்மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் இருந்த கூட்டத்தில் ஒருவரை, ஒருவர் அநாகரிகமாக திட்டி கொண்டு காரி துப்பி கொண்ட சம்பவம் அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.