நாகையில் மேம்பால பணிகளுக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், வீட்டின் உரிமையாளருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் மேம்பால பணிகள் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் நில கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டி இருந்து வருகின்றனர். இந்த இடத்தை காலி செய்ய நகராட்சி சார்பில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேம்பால பணிகள் தடை பட்டதால் இன்று நாகப்பட்டினம் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய இன்று பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டை இடிக்க விடாமல் தர்ணா செய்தனர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வீட்டை இடித்து ஆக்கிரப்பை அகற்றம் செய்தனர். அதனால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)