பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதிகளில் உள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது. கோயில்கள் உண்டியல்களை உடைத்து, பணம் எடுத்து சென்றது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பாடாலூர் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த நல்லதம்பி மகன் கருணாகரன் (19). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பெரியசாமி (30), சின்னமுத்து மகன் பால்ராஜ் (25), மேலப்புலியூரை சேர்ந்த கலியன் மகன் மணிகண்டன் (39) என்பதும், அங்குள்ள கடைகள், வீடுகள் கோயில்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பாடாலூர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
