• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழங்குடியின மாணவ, மாணவிகளின் அவல நிலை

ByS. அருண்

Feb 19, 2025

திருச்சி மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கும் மலைப்பிரதேச கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளி 2 ஆண்டுகளாக கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவலம். கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருக்கும் மாவட்டத்தில் பள்ளி கட்டிடத்தை துரிதமாக கட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைப் பிரதேசமான பச்சை மலைப் பகுதியில் அமைந்துள்ளது ராமநாதபுரம் கிராமம் . இந்த கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 1964ஆம் ஆண்டு முதல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 23 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் பனி காலியாக உள்ளது. தற்போது பார்த்திபன் என்ற ஆசிரியர் மட்டும் உள்ளார். அவரும் தற்போது விடுப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த பள்ளிக்கூடத்திற்கு சொந்தமாக இருந்த கட்டிடமானது சேதம் அடைந்த காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தை புதிப்பிபதற்காக பழைய கட்டிடத்தை இடித்து உள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் அரசு எடுக்காததால் இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு வருடங்களாக மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்து வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் மழை பெய்தால் மரத்துக்கு அடியில் உட்கார்ந்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.

தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாமலும் தற்போது இருக்கும் ஆசிரியர் அவ்வப் போது பாடம் நடத்தி செல்வதால் முழுமையாக குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடியாமல் உள்ளன. மேலும் அறிவுசார் கணினி கல்வி இரண்டு ஆண்டுகளாக கற்றுத் தரவில்லை என கூறப்படுகிறது.

மலைப்பிரதேசம் என்பதாலும் திருச்சி மாவட்டத்தின் கடைகோடி பகுதி என்பதால் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மலைப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யாமல் இருப்பதால் ஆசிரியர்கள் சரிவர வராமல் பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழைய கட்டிடத்தை இடித்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு முன்னேற்றங்களை கொண்டுவரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இருக்கும் அன்பில் மகேஷ் மாவட்டத்தில் இதுபோன்று இருக்கும் பள்ளிகளில் மாணவர்களின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பள்ளி கட்டிடத்தை கட்டுவது மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி ஆசிரியர்கள் முழுமையாக பள்ளிக்கு செல்கிறார்களா என கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு விடுவது மட்டுமல்லாமல் மலைப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.