விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகிக்கிறார், நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ,சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன், கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள். விழாவில் அரசு துறையின் அலுவலர்கள் மற்றும் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ,குடியாத்தம், தருமபுரி ,பொள்ளாச்சி, காவேரிப்பட்டினம் ,உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தீக்குச்சி தயாரிப்பாளர்கள், பட்டாசு, அச்சகம் ,மத்தாப்பு, கம்மி, மத்தாப்பு ,லாரி டிரான்ஸ்போர்ட், மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள், நிர்வாகிகள், வியாபார பெருமக்கள், வர்த்தக பிரமுகர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர் கலந்து கொள்கிறார்கள், தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் எல்லா தரப்பு மக்களும் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகாசி அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து செய்து வருகின்றனர்.
