மலைக்கந்தன் கோவில் தைப்பூச திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அருகே மலைக்கந்தன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி பல்வேறு காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
கட்டாணிபட்டி கிராமத்தை அடுத்துள்ளது பெரியகோட்டைபட்டி கிராமம். இங்கு மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு மலைக்கந்தன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் தேதியே இந்த கட்டாணிபட்டி, பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுபட்டி, நடுவுபட்டி, கீழப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் காப்புக்கட்டி தங்களது விரதத்தை துவங்கினர்.

தைப்பூசத்தன்று கட்டாணிபட்டி விநாயகர் கோவிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அலகு குத்துதல், பறவை காவடி, பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு சுமந்து சுமார் 2 கி.மீ தூரம் நடந்து அருள்மிகு மலைக்கந்தன் கோவிலுக்கு சென்று செலுத்துவதுடன் மலைக்கந்த சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், திருநீரபிஷேகம் பண்ணீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து அலங்கரிக்கப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நாளை மலை அடிவாரத்தில் உள்ள முனீஸ்வரனுக்கு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ளது.
