பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களில், ஆட்கள் வைத்து ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ரவிகரன் (30), சசிகரன்(32). அண்ணன்-தம்பிகளான இருவர் மீதும் கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல், மிரட்டல் – உருட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இருவரும், சிறையில் இருந்து கொண்டே வெளியே வைத்துள்ள அவர்கள் நெட்வொர்ட்க்கை வைத்து, செல்போன் மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் கிரேஸ் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.