• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தி வரும் வழியில் மர கிளைகள் விழுந்ததால் பரபரப்பு

ByKalamegam Viswanathan

Feb 9, 2025

சோழவந்தான் அருகே அமைச்சர் மூர்த்தி வரும் வழியில் பழமையான புளிய மர கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு …

சோழவந்தான் பிப் 9 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதேநேரம் சோழவந்தானில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி வருகை தர இருந்த நிலையில் புளியமரம் சாலையில் விழுந்ததால் காவல்துறையினர் பதட்டம் அடைந்தனர்

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அலுவலர்களை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த மர கிளைகளை ரம்பங்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அமைச்சர் வரும் வழியில் புளிய மர கிளை சாலையில் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது